சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அமைச்சர் ராமச்சந்திரன் பதிலளித்துப் பேசினார்.
“முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களும், அனைத்து வகையான சான்றிதழ்களும் வருவாய்த்துறை மூலமாகவே வழங்கப்படுகின்றன.
“மாதத்துக்கு 50 ஆயிரம் பட்டா என்ற அளவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்.
“கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.20,365 கோடி மதிப்புள்ள 35,654 அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம்.
“ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையத் திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை விரைவாகக் கையகப்படுத்திக் கொடுத்து வருகிறோம்.
“அந்த வகையில், மதுரை, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிக்குத் தேவையான நிலம் முழுவதும் கையகப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
“கோவை விமான நிலையத்துக்கு இதுவரை 468 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.