சென்னை: சென்னை நகரவாசிகள் குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துச் சேவையைப் பெற உள்ளனர்.
ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இச்சேவை தொடங்க உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பிரபு சங்கர் கூறியுள்ளார்.
அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சாரப் பேருந்துகளை ஐந்து பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் 120 குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகளைத் தொடங்கி வைத்தாா். சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து அப்பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது பெரும்பாக்கம் பணிமனையில் குளிர்சாதன மின்சாரப் பேருந்துச் சேவை தொடங்கப்பட உள்ளதாக பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.