சட்டப்பேரவைத் தேர்தல்: நூறு வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்ட சீமான்

1 mins read
6aa2184f-d3a8-4261-9e68-8f845a4cd96a
சீமான். - படம்: ஊடகம்

சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் நூறு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், பெண்களுக்கு 50 விழுக்காடு தொகுதிகள் ஒதுக்கப்படும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

மேலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் பிரம்மாண்ட மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்ற அறிவிப்பும் அடுத்து வெளியானது.

இந்நிலையில், முதற்கட்டமாக நூறு வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை சீமான் வெளியிட்டுள்ளார். இதில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

எனினும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இடும்பைவனம் கார்த்திக், இயக்குநர் களஞ்சியம், சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்