கள்ளத்தனமாக இலங்கை செல்ல முயற்சி; முகாமைச் சேர்ந்த நால்வர் கைது

1 mins read
fb13cae8-7580-4357-813c-b3523c6b794a
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த நான்கு பேரை தங்கச்சி மடம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - படம்: இந்து தமிழ் திசை

ராமேசுவரம்: ராமேசுவரத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கான முகாமில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் படகில் செல்ல முயற்சி செய்த நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இலங்கையில் இருந்து அகதிகளாகத் தனுஷ்கோடிக்கு வந்த 310க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ராமேசுவரம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் காவல்துறை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் நான்கு பேர் கையில் பைகளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள் முகாமில் இருந்தவர்கள் என்பது தெரிய வந்தது. உடனே அவர்களைத் தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நால்வரும் சட்டவிரோதமாகப் படகு மூலம் இலங்கை செல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. அவர்களைப் படகு மூலம் அழைத்துச் செல்ல இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறை அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்