சென்னை: உலகளவில் கோழியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளில் ‘சிக்கன் 65’ 3வது இடத்தில் வந்துள்ளது.
பிரபல உணவு, சுற்றுலா வழிகாட்டியான ‘டேஸ்ட் அட்லாசி’ன் புதிய வெளியீடாக கோழியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழகத்தில் உருவான சிக்கன் 65 மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே உணவு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இதில் தென்கொரியாவின் சிக்கின் (Chikin) முதல் இடத்திலும் ஜப்பானின் கராஜ் (Karaage) இரண்டாவது இடத்திலும் வந்துள்ளன.
டேஸ்ட் அட்லாஸ், சிக்கன் 65யின் பிரத்யேக தயாரிப்பு, சுவையை புகழ்ந்துள்ளது. இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, காரம், புளிப்பு என மசாலாக்களில் நன்கு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து சிக்கன் 65 தயாரிக்கப்படுகிறது.
இது 1960ஆம் ஆண்டு தமிழகத்தில் புஹாரி என்ற உணவகத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

