கோவையில் முக்கியச் சாலையில் பேனர்களை அகற்ற மாற்று வழியைக் கையாளும் மாநகராட்சி

1 mins read
9896714a-8184-4a05-900d-b9114424ce03
கோவை மாநகராட்சி. - படம்: ஊடகம்

கோவை: கோவை மாநகரில் வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் சட்டவிரோத பேனர்களையும் விளம்பர பலகைகளையும் மூடி மறைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலத்தில் அமைந்துள்ள ப்ரூக் பாண்ட் சாலை எனப்படும் கிருஷ்ணசாமி சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

அந்த சாலையில் வாகனமோட்டிகளின் கவனம் சிதறும் வகையில் சட்ட விரோதமாக 400 மீட்டருக்குள் 15 பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கோவை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற முயன்ற போது, அதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது.

அதனால் அவற்றை அகற்றுவதற்கு பதிலாக மிகப்பெரிய திரைச்சீலைகளைக் கொண்டு சட்டவிரோத பேனர்களையும் விளம்பர பலகைகளையும் மறைக்க இருப்பதாகவும் இது தொடர்பாக அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்