தமிழகத்தில் தொடர்மழையால் பரவும் டெங்கி காய்ச்சல்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

1 mins read
0eeeaf0e-cb61-4e11-a35f-49ea5c54c11c
மழை நீர் தேங்குவதால் கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகும் என்றும் அதிக காய்ச்சலே டெங்கிக்கான அறிகுறி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த தொடர்மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை, தஞ்சை, கடலூர், மதுரை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கியால் பாதிக்கப்போட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாவட்டங்களில் நாள்தோறும் குறைந்தது 100 முதல் 120 பேர் வரை டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்படும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, கோவை, மதுரை, கடலூர், தஞ்சை, வேலூர் மாவட்டங்களில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் காரணமாக டெங்கிக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.

மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தியாகும் என்றும் அதிக காய்ச்சலே டெங்கிக்கான அறிகுறி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் பரவலாக கூடுதல் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள், சிறார்கள், வயதில் மூத்தவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்