மக்கள் கருத்தைக் கேட்ட பிறகே இறுதி முடிவு: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

மக்கள் கருத்தைக் கேட்ட பிறகே இறுதி முடிவு: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

படம்: இந்து தமிழ் திசை

21 Sep 2026 - 5:38 pm

1 mins read

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் புதிய சட்டமன்றம், தலைமைச் செயலக வளாகம் அமைப்பது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், தற்போதைய சட்டமன்றத்தில் கூட்டநெரிசல் அதிகரித்துள்ளதால், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் தேவை என்பது உண்மைதான் என்றார்.

இருப்பினும், இது தொடர்பாக மக்களின் கருத்துகள் சேகரிக்கப்படும் என்றும் அதன் பிறகே முதல்வர் இறுதி முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் தங்களின் கருத்துகளைப் பேசப் போதிய நேரம் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

“மக்கள் நலப் பணிகளைச் செய்வதில் மட்டுமே ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். வீண் அரசியலைத் தவிர்த்து, மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே தவெக அரசின் முதன்மை அணுகுமுறை,” என்றார் அமைச்சர் ராஜ்மோகன்.

குறிப்புச் சொற்கள்