எவ்வளவு பெரிய மழையையும் அரசு சமாளிக்கும்: அமைச்சர் ராமச்சந்திரன்

1 mins read
56a12409-5b4c-4bc6-b1fe-d6a0e044e762
ஃபெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை பட்டாளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: காற்றும் மழையும் வேகமாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தி உள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநில அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை எழிலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “புயல் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

“மழை பாதிப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஐந்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் விவரம் கேட்டறிந்துள்ளார்.

“இரவு நேரத்தில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தாழ்வான பகுதிகள், கடற்கரையோரம் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்லவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

“எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது,” என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்