கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுப்பதைத் தடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

1 mins read
ae54eb09-b63b-4b73-9133-a361f10088ee
வாகனங்கள் நிறைந்த சாலையில் குழந்தையைக் காட்டி பிச்சை எடுக்கும் பெண். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் சாலைகளில் கைக் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் தமிழ்​வேந்​தன் தாக்​கல் செய்​த மனு​வில், “சென்​னை​யில் பெரும்​பாலான சாலைகளில் பச்​சிளம் குழந்​தைகளு​டன் பிச்சை எடுக்​கும் பெண்​கள், அந்தக் குழந்​தைகளின் உண்​மை​யான தாய்தானா என்​பதை கண்​டறிந்து விசா​ரிக்க உத்​தர​விட வேண்​டும்.

“அந்தப் பெண்கள் வடஇந்தியாவைச் சேர்ந்​தவர்​களாக உள்​ளனர். குழந்​தைகளை பிச்சை எடுக்க பயன்​படுத்​து​வதை தடுக்​கும் வகை​யில் உரிய நடவடிக்​கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும்,” என கோரி​யிருந்​தார்.

அந்த மனு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா, நீதிபதி ஜி. அருள் ​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு முன் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், “பச்​சிளம் குழந்​தைகளை வைத்து பிச்சை எடுப்​பது என்​பது மனி​தாபி​மானமற்ற செயல்.

“அவ்வாறு பிச்சை எடுப்​பதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடை​முறை​களை வகுக்க வேண்​டும். மேலும், இதுதொடர்​பாக என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து பதிலளிக்க வேண்​டும்,” என உத்​தர​விட்டு விசா​ரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்​குத் தள்​ளி வைத்​தனர்​.

குறிப்புச் சொற்கள்