தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமித்ஷாவுடன் தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதித்தேன்: செங்கோட்டையன்

2 mins read
deecf82e-d6eb-41b5-bb4c-d7f8400d60dc
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: ஹரித்துவாருக்கு இறைவழிபாட்டுக்காகச் செல்வதாகக் கூறி டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்ற முன்னாள் தமிழக அமைச்சர் செங்கோட்டையன், அங்கு பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களுமான அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து வந்துள்ளார்.

சென்னை திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஹரித்துவார் செல்வதாகச் சொல்லிவிட்டு டெல்லி சென்றேன். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. எனவே, அமித்ஷாவையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசினேன்.

“அந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல் குறித்தும், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினை குறித்தும் எடுத்து விளக்கினேன். பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் அதிமுக வலுப்பெறும் என்றும் அவர்களிடம் எடுத்துக் கூறினேன்,” என்றார்.

“உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, அங்கே ரயில்வே அமைச்சர் வருகை தந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், முதலில் 10 மணிக்கு புறப்பட்டது. இப்போது முன்கூட்டியே புறப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக சொன்னேன். அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

“மக்களுக்குத் தொண்டாற்றவும் அதிமுக வலுப்பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்,” என்று செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக, அதிமுக​விலிருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாள்களில் தொடங்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் பொதுச் ​செயலாளர் பழனி​சாமிக்​குச் செங்​கோட்​டையன் கெடு விதித்​தார்.

இதைத் தொடர்ந்து அவருடைய கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அத்துடன், அவருக்கு ஆதரவாகப் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகள் சிலரையும் திரு பழனிசாமி நீக்கியுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்களில் பலர் எடப்பாடி பழனிசாமியை நாடிச் செல்வதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கஎடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக அவர் அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார்.

தமிழக சட்டமன்ற்அத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் பலர் சந்தித்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்