வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருவேன்: சீமான்

வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் தருவேன்: சீமான்

1 mins read
bb29397c-3203-4425-a506-14755081254c
சீமான். - கோப்புப்படம்: மாலை மலர்

காரைக்குடி: வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் என்று நாம் தமிழர் கட்சியாலும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீச முடியும் என்று சீமான் கூறியுள்ளார்.

காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், காதில் தேன் ஊற்றுவதுபோல், பல கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.

மற்ற கட்சிகள் எப்படி இலவச எரிவாயுக் கலன், பெண்களுக்கு ரூ.3,000 தருவார்களோ, அப்படித்தான் நாதகவும் ஹெலிகாப்டரும் தங்கமும் கொடுக்கும் என்றார்.

மதுக்கடைகளை மூடி, நல்ல கல்வி தந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக எந்தக் கட்சியும் கூறுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், வேலை இல்லாதவர்களுக்கு ரூ.4,000 உதவித்தொகை, படிப்பதற்கு 20 லட்சம் ரூபாய் கல்விக்கடன் என்று அள்ளிவிடுவதாகத் தெரிவித்தார்.

“இதற்குப் பதில், சொந்தக் கல்வி நிலையத்தை ஏற்படுத்தலாம். மதுக்கடைகளை மூடாமல் தமிழகத்தில் பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு வழங்க முடியும்?,” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

குறிப்புச் சொற்கள்