ஆறு விமானச் சேவைகளை ரத்து செய்த இண்டிகோ

1 mins read
f4ed4132-ae28-4c11-9c43-2f6aa0ff6bf5
உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு ஏடிஆர் ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  - படம்: மின்ட்

சென்னை: திருச்சி-சென்னைக்கு இடையேயான விமானச் சேவைகளை ரத்து செய்வதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இரு நகரங்களுக்கு இடையே ஆறு சேவை அளித்து வந்த நிலையில், அந்த எண்ணிக்கை இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமானங்கள் இயக்கப்படுகின்றன, மேலும் டெல்லி, ஹைதராபாத், பெங்களுரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.

உள்நாட்டு விமானச் சேவைகளுக்கு ஏடிஆர் ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, திருச்சியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் காலை 7.35 முதல் இரவு 10.15 வரை ஆறு விமானச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், டிசம்பர் 16 (செவ்வாய்க்கிழமை) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை ஆறு விமானச் சேவைகளில் நான்கு ரத்து செய்யப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாறாக, காலை 10.35 மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் இரண்டு சேவைகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விடுமுறை நாள்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளைக் கொண்ட ஏர்பஸ் விமானம் இயக்கப்பட இருப்பதே இதற்குக் காரணம் என்றும் இது பயணிகளுக்கு நிச்சயம் பயன் அளிக்கும் என்றும் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்