கோவை: தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின்போது ஏற்பட்ட மோதல், விதிமீறல் வழக்குகள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியும் வேட்பாளருமான கார்த்திகா, அவரது கணவர் உள்ளிட்ட ஆறு பேரைக் கோவையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்தின்போது, முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, காவல்துறையினர் நாதகவினரை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர்.
இதைடுத்து, காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது வைக்கப்பட்டிருந்த பதாகைகளை அதிகாரிகள் அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்த்திகா தலைமையில் நாதக தொண்டர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்துக்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர், கார்த்திகாவையும் அவரது கணவர் உட்பட ஆறு பேரையும் கைது செய்து கூடுதல் விசாரணைக்காகத் தாராபுரத்துக்கு அழைத்துச் சென்றனர்.
