இடைத்தேர்தலுக்கு அனுமதி; முதலமைச்சர் விஜய் மனு தள்ளுபடி

இடைத்தேர்தலுக்கு அனுமதி; முதலமைச்சர் விஜய் மனு தள்ளுபடி

படம்: தினமணி

27 Nov 2026 - 6:48 pm

1 mins read

சென்னை: அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், இவ்விரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் வழக்கு முடிந்தால் மட்டுமே திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை தொகுதிகளில் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெரம்பூர் தொகுதியில் தமது வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கும்படி முதலமைச்சர் விஜய்யின் தரப்பில் கோரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் 120,365 வாக்குகள் பெற்று 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றிபெற்றார்.

அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, வாக்காளர் எஸ். தினேஷ் என்பவர் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார்.

தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் சொத்து விவரங்களை விஜய் மறைத்ததாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வழக்கை ஆரம்பத்திலேயே நிராகரிக்கக் கோரி விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

சொத்துகளை மறைத்ததாகக் கூறப்படும் புகாரைத் தேர்தல் வழக்கு விசாரணையிலேயே முடிவுசெய்ய முடியும் எனக் கூறி, நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

குறிப்புச் சொற்கள்
விஜய்இடைத்தேர்தல்நீதிமன்றம்வழக்குநீதிபதி