தமிழகத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்

1 mins read
bfd38ae1-5dd1-4216-981a-b2fb4c6b1eef
ஒரு பவுன் தங்கத்தின் விலை, விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டிப்பிடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: எல்ஈடி லைட்

சென்னை: தமிழகத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை, ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.

வியாழக்கிழமை (டிசம்பர் 11) ஒரு பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு பவுன் ரூ.98,000க்கு விற்பனையானது.

பல்வேறு காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாமானியர்களுக்கு தங்க நகைகள் வாங்குவது வெறும் கனவாக ஆகிவிடுமோ என்ற கவலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,250க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அநேகமாக, டிசம்பர் 13ஆம் தேதி (இன்று) ஒரு பவுன் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்டிப்பிடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்