‘எஸ்ஐஆர்’: மூன்று மாநிலங்களில் மொத்தம் ஒரு கோடி பெயர்கள் நீக்கம்

1 mins read
3ba630d4-cda9-46cc-8e10-56101b9b830c
வரைவு வாக்காளர் பட்டியலை அதிகாரபூர்வமாக வெளியிட்டது தேர்தல் ஆணையம். - படம்: தினமலர்
multi-img1 of 2

புதுடெல்லி: மூன்று மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த நடவடிக்கைக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய மூன்று மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

தீவிர திருத்த நடவடிக்கையின்போது மேற்கு வங்கத்தில் ஆக அதிகமாக, 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இதேபோல் ராஜஸ்தானில் 44 லட்சம் பெயர்களும் கோவாவில் 1.01 லட்சம் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

லட்சத்தீவில் 58 ஆயிரம் வாக்காளர்களில் 56,384 பேர் வரைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் புதுவையில், 103,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இது முன்பிருந்த வாக்காளர் எண்ணிக்கையில் 10 விழுக்காடு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் 2.15 வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது. சென்னையைப் பொறுத்தவரை 35% வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏறக்குறைய ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்