அக்டோபர் 27ல் தவெக மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு

அக்டோபர் 27ல் தவெக மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு

1 mins read
d9816ac2-31b9-455d-8b7a-68789f789ebe
விஜய். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமைய உள்ள மாநாட்டிற்கான களப்பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் அடையப்போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட உள்ளது.

“இம்மாநாட்டின் மூலம் வலிமையான அரசியல் பெரும்பாதை அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஆதரவை, ஆசிகளை உரிமையுடன் வேண்டுகிறேன்,” என்று விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இம்மாதம் நடைபெற இருந்த விஜய் கட்சி மாநாட்டுக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்
விஜய்கட்சிமாநாடு