அவனியாபுரம்: மதுரை விமான நிலையத்தில் நேற்று மாலை சிங்கப்பூரிலிருந்து வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த பாண்டியன், 36, என்பவரின் உள்ளாடைக்குள் ஒரு பிளாஸ்டிக் பையில் களிமண் இருந்ததை அதிகாரிகள் கண்டனர். களிமண்ணைச் சோதனையிட்டதில் அதில் 287 கிராம் தங்கம் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ. 11 லட்சம். அதிகாரிகள் பாண்டியனிடம் தீவிர விசாரணை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
உள்ளாடைக்குள் தங்கம், பறிமுதல்
1 mins read

