பொங்கல்: முதியவரின் சாகசக் காணொளி

முன்பெல்லாம் சோகையுடன் கரும்பு வாங்கி பொங்கல் கொண்டாடுவார்கள். தற்போது, கரும்பை அவ்வாறு வாங்கி தூக்கிச் செல்வது சிரமமாக இருப்பதால் பெரிம்பாலானவர்கள் கரும்புத்துண்டை வைத்து பொங்கல் கொண்டாடுகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் முதியவர் ஒருவர் தலையில் கரும்புக்கட்டை சுமந்தவாறு வேகமாக சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சைக்கிளில் பொங்கலுக்கான சாமான்களும் பைகளில் உள்ளன. டிக்டாக் , முகநூல் , இன்ஸ்டாகிராம், ஷேர்சேட் , என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் இந்த இவர் வலம் வருகிறார்.

எந்த வித பிடிமானமும் இல்லாமல் தலையில் கரும்பை சுமந்து கொண்டு சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்லும் இந்த 'சாகச' முதியவர்  சமூக ஊடகங்களில் இந்த பொங்கலுக்கு 'ட்ரெண்டாகி'யுள்ளார்.

#பொங்கல் #முதியவர் #கரும்பு