குப்பை சேகரிக்கும் மூதாட்டிகள் வீட்டில் குடம் குடமாக இருந்த ரூ.2 லட்சம் பணம், காசுகள்

2 mins read
1cffd4a4-94e3-4328-8ee1-4bbf17a56de1
பணமிருந்தும் ஏழைகளாக இருந்த மூன்று மூதாட்டிகள் சேர்த்து வைத்துள்ள ரூ.2 லட்சம் காசு, பணம். படம்: தமிழக ஊடகம் -

திரு.வி.க.நகர்: வீட்­டுக்­குள் ரூ.2 லட்­சத்­துக்கு மேல் பணம் இருந்­தும் அதைப் பயன்­ப­டுத்­தும் வழி தெரி­யா­மல் சாலை­யோ­ரம் தவித்து வந்த இரு மூதாட்­டி­க­ளைக் கண்டு அப்­ப­குதி மக்­கள் வியந்தனர்.

போலி­சார் மூதாட்­டி­க­ளின் குடிசை வீட்டை சுத்­தம் செய்து, அவர்­கள் வீட்­டில் இருந்து மீட்­கப்­பட்ட நகை, பணத்தை அவர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கும் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

சென்னை, ஓட்­டேரியில் குடிசை மாற்று வாரியக் குடி­யி­ருப்­பில் சகோ­தரிகளான ராஜேஸ்­வரி, 65, விஜய லட்­சுமி, 60, பிர­பா­வதி, 57, ஆகி­யோர் வசித்து வந்­த­னர்.

இவர்­கள் அப்­ப­கு­தி­யில் உள்ள பிளாஸ்­டிக் குப்­பை­களை பொறுக்கி, அதை விற்று அதில் கிடைக்­கும் பணத்­தில் பிழைத்து வந்­த­னர்.

சகோதரிகள் மூவரில் கடந்த ஒரு மாதத்­திற்கு முன்பு நடை­பாதை­யில் இறந்துபோன பிர­பா­வதியை மீட்டு போலி­சார் அடக்­கம் செய்­த­னர். இந்­நி­லை­யில், ஆத­ர­வற்ற நிலை­யில் மற்ற இரு சகோதரி­கள் சாலை­யோரம் தங்கி வந்­த­னர்.

அவர்­க­ளி­டம் போலி­சார் விசா­ரித்தபோது, "வீடு இருந்­தும் வீட்­டில் தங்க இடம் இல்லை," என்று மூதாட்­டி­கள் கூறி­ய­தால் போலி­சார் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.

அவர்­க­ளது வீட்­டுக்­குள் குப்பை கள் குவி­யல் குவி­ய­லாக மூட்டை கள் கட்­டப்­பட்டு இருந்­தன. அவற்­றைப் போலி­சார் சுத்­தம் செய்­த­போது, அந்த வீட்­டில் ஆங்காங்கே பணம் சித­றிய நிலை­யி­லும் பிளாஸ்­டிக் குடங்­கள், பைகளில் சில்­ல­ரை­கள் குவிந்து கிடந்ததைப் பார்த்து போலி­சார் அதிர்ந்தனர்.

அவற்றை எண்­ணிப் பார்த்­த­தில் மொத்­தம் ரூ.2 லட்­சத்­துக்­கும் அதி­ க­மா­கவே காசு, பணம் இருந்தது. மேலும் செல்­லாத ரூபாய் நோட்­டு­க­ளான பழைய 500, 1000 ரூபாய் நோட்­டு­களும் சுமார் ரூ.40 ஆயி­ரம் வரை இருந்­துள்­ளன. அத்­து­டன் 7 பவுன் நகை­களும் இருந்­த­ன.