குரங்கு தூக்கிச்சென்ற குழந்தைகளில் ஒன்று சடலமாக மீட்பு

தஞ்சாவூரில் குரங்குகளால் தூக்கிச் செல்லப்பட்ட, பிறந்து 8 நாள்களே ஆன இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை ஓட்டின் மேல் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

தஞ்சை மேல அலங்கத்தில், ராஜராஜ சோழன் காலத்தில் வெட்டப்பட்ட அகழியை ஒட்டிய பகுதிகளில் நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன.

இப்பகுதியில் குரங்குகள் தொல்லை பெருகிவருவதாகவும் வீடுகளில் உள்ள பொருட்களைத் தூக்கிச் சென்றுவிடுவதாகவும் ஏற்கெனவே புகார்கள் உள்ளன.

இந்நிலையில், ராஜா-புவனேஸ்வரி தம்பதிகளுக்கு எட்டு நாட்களுக்கு முன்னர் பிறந்த இரட்டைப் பெண் குழந்தை களுடன் வீட்டில் இருந்துள்ளனர்.

திடீரென வீட்டிற்குள் புகுந்த இரண்டு குரங்குகள், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இரு குழந் தைகளையும் தூக்கிச் சென்று விட்டன. பதறிப்போன பெற்றோர் குரங்கை பின்தொடர்ந்த நிலையில், ஒரு குரங்கு வீட்டின் ஓட்டுக்கூரை மீது ஒரு குழந்தையைப் போட்டு விட்டு ஓடிவிட்டது.

மற்றொரு குரங்கு குழந்தை யுடன் ஓடிவிட்ட நிலையில், அது அகழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!