சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கைநிறைய சம்பாதிக்கும் ஆசையுடன் வெளிநாட்டுக்குச் சென்றவர்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 200 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக நியூஸ் 18 ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016ஆம் ஆண்டு முதல் 2019 வரையிலான மூன்று ஆண்டுகளில் வெளிநாட்டுக்குச் சென்ற 200 தமிழர்களின் உடல்கள் தமிழகம் வந்தடைந்துள்ள தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-17ல் 48 உடல்களும் 2017-18ல் 75 உடல்களும் 2018-19ல் 77 உடல்களும் தமிழகம் கொண்டு வரப்பட்டதாக விவரம் கூறுகிறது.
பணிக்குச் செல்லும் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முக வரி, தொடர்பு எண்ணை வெளிநாடு செல்பவர்கள் தெரிந்துகொள்வது அவசியம் என்று ஆணையகம் அறிவுறுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, அதன்மூலம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி வலியுறுத்தி உள்ளார்.