முதல்வர்: இனிவரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் நடைெபறாமல் தடுக்க நடவடிக்கை

சென்னை: தமி­ழ­கத்­தில் பெண்­கள், சிறார்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­கள் நாளும் அதி­க­ரித்து வரு­வ­தா­க­வும் இந்தக் குற்­றங்­கள் குறித்த விசா­ர­ணை­யைத் துரி­தப் படுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காவல்துறையின ருக்கு அறி­வு­றுத்­தி உள்ளார்.

இனிவரும் காலங்­களில் இது­போன்ற குற்­றங்­கள் நடை­பெ­றா­மல் தடுக்க, பாலி­யல் குற்­றங்­களில் இருந்து குழந்­தை­களைப் பாது­காக்­கும் சட்­டத்தை தீவி­ர­மாகச் செயல்­படுத்த அனைத்து துறை­களும் ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்றும் முதல்­வர் கூறியுள்ளார்.

பாலி­யல் குற்­றங்­களில் இருந்து குழந்­தை­க­ளைப் பாது­காக்­கும் (போக்சோ) சட்­டத்­தின் செயல்­பாடு­கள் குறித்த ஆய்­வுக் கூட்­டம் முதல்­வர் ஸ்டா­லின் தலை­மை­யில் நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டம் குறித்து அரசு வெளி­யிட்டுள்ள செய்தியில், பாலி­யல் குற்­றங்­க­ளால் பாதிக்­கப்­பட்ட 148 குழந்­தை­க­ளுக்கு இது­வரை ரூ.2 கோடி நிதி முதல்கட்­ட­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. அடுத்­த­கட்­ட­மாக ரூ.5 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இழப்­பீ­டு­களைத் துரி­த­மாக வழங்கவும் முதல்வா் கூறியுள்ளார்.

“ஒவ்­வொரு வகுப்­பறை­யி­லும் 1098 என்ற சிறாா் உதவி எண் குறித்­தும் விழிப்­புணர்வு ஏற்­ப­டுத்த வேண்டும்.

“பாலி­யல் குற்­றங்­க­ளால் பாதிக்­கப்­படும் குழந்­தை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு, மருத்­து­வப் பரி­சோ­தனை, உடனடி சிகிச்­சை­கள் வழங்­க­வேண்­டும்,” என முதல்வா் அறி­வு­றுத்­தி உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!