தமிழ் குறும்படம் ஒன்று அனைத்துலக திரைப்பட நிகழ்ச்சிகளில் விருதுகளை குவித்துவருகிறது. 'ஷஷ்டி' எனப்படும் இந்த குறும்படம் 59 அனைத்துலக திரைப்பட நிகழ்ச்சிகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை 25 விருதுகளை அது வென்றுள்ளது. வசதி குறைந்த குடும்பத்தை சேர்ந்த தேவி எனும் பெண்ணுடைய கதையை மையமாக கொண்டுள்ளது இந்த குறும்படம். தேவி தன்னை சுற்றியுள்ள சமூகத்தை எவ்வாறு மாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கருப்பொருள்.
படத்தின் இயக்குநர் உட்பட, நடிகர்கள் பெரும்பாலானோர் புதுமுகங்கள். அனைத்துலக திரைப்பட விழாவில் படத்தை சமர்ப்பிக்கும் நோக்கத்துடன் குறும்படத்தை எடுத்ததாகக் கூறுகிறார் இயக்குநர் ஜூட் பீட்டர் டேமியன்.
"இத்தனை விருதுகளை வென்றதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் ஆஸ்கர் விருதுக்கு படம் தகுதிபெறாதது சற்று ஏமாற்றம்தான் என்று," குறிப்பிட்டார் ஜூட்
கதை, திரைக்கதையை எழுதுவதற்கு ஜூட் ஓர் ஆண்டு எடுத்துகொண்டார். படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நிறைவடைந்தது.

