தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

209 பவுன் தங்க நகைகள் மாயம்

1 mins read
5cc83f88-bbce-4a3d-8cc2-9a69f4328ceb
-

அரியலூர்: தங்கநகைகளை அடமானம் வைக்கும் கடை ஒன்றின் சுவரில் கொள்ளை யர்கள் ஓட்டை போட்டு 209 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காவலர்கள் தேடி வருகின்றனர்.

இங்குள்ள பாப்பாக்குடி கடைவீதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த சங்கர் என்பவர் நகை அடகுக்கடை நடத்தி வரும் நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அவர் கடையைத் திறக்கவந்தார்.

அப்போது கடையின் பாதுகாப்புப் பெட்டகம் உடைக்கப்பட்டு அதில் இருந்த 209 பவுன் தங்கநகைகள், வெள்ளிப் பொருள்கள் களவு போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.31¼ லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மோப்பநாயான மலர் எதையும் கண்டுபிடிக்க முடியாமல் நின்றது. விசாரணை நடந்துவருகிறது.