மருத்துவர்கள் தலைமறைவு; உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு வீடு வழங்கினார் ஸ்டாலின்

சென்னை: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் காற்பந்து வீராங்கனை பிரியா, 17, இம்மாதம் 15ஆம் தேதி காலை உயிரிழந்தார்.

கல்லூரி மாணவி பிரியாவின் மரணம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்னும் ஆறு வாரங் களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும் சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பிரியாவின் உயிரிழப்புக்கு கார ணமாக இருந்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால்ராம் சங்கர் ஆகி யோர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டு உள்ளனர்.

இந்த இடைநீக்க உத்தரவு குறித்த நகலை மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வழங்குவதற்காக அவர்களது வீட்டிற்குச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பெரவள்ளூர் காவலர்கள் மருத்துவர்களைத் தேடி வருகின்றனர்.

வீடு வழங்கிய ஸ்டாலின்

இதனிடையே, பிரியாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின், அவர்கள் குடியிருப்பதற்கு ஏதுவாக வீட்டிற்கான ஆணையையும் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையையும் வழங்கினார்.

இதுகுறித்து, அமைச்சர் சுப்பிர மணியன் கூறுகையில், தமிழகத்தில் 20,000 அரசு மருத்துவர்கள் உள்ளனர். ஒரு சிலரின் கவனக் குறைவு, அலட்சியத்தால், இது போன்ற தவறுகள் நடக்கின்றன. இதற்காக ஒட்டுமொத்த மருத்துவத் துறையையும் குற்றம்சாட்ட முடியாது. இனி வரும் காலங்களில், இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று கூறினார்.

மாணவி பிரியாவுக்கு கொளத் தூர் பெரியார் நகர் அரசு மருத்துவ மனையில் வலது மூட்டு சவ்வை சரிசெய்யும் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர், அவரது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு, ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டன

மேல் சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது வலது கால் அகற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த காற்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்தினரை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து, ரூ.10 லட்சம் நிதியுதவி, குடும்பத்தினர் வசிப்பதற்கான வீடு, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான பணி உத்தரவு ஆகியவற்றை வழங்கினார்.

படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!