ஆரஞ்சு வண்ணத்தில் ஒளிர்ந்த ரிப்பன் கட்டடம்

1 mins read
29189525-c8d4-428d-9c7f-410858c0d5ca
-

ஐ.நா. சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25ஆம் தேதி அனைத்துலகப் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னையில் உள்ள ரிப்பன் கட்டடம், நேப்பியர் பாலம் ஆகியன ஆரஞ்சு வண்ணத்தில் ஒளிர்வூட்டப்பட்டன. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இம்மாதம் 25 முதல் அனைத்துலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 வரை 16 நாள்களுக்கு நடைபெறும் பாலின வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி பங்கேற்பதால் ரிப்பன் கட்டடம், நேப்பியர் பாலம் ஆகியன ஆரஞ்சு நிறத்தில் ஒளிர்ந்தன.

படம்: டுவிட்டர்