விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு பெண் நிர்வாகிகள் அறிவிப்பு

சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கு என தனி அணி அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என விஜய் இலக்கு நிர்ணயித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை அணிக்கான நிர்வாகிகளின் பெயர்களை கட்சித்தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய அணி பெண்கள் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விஜய், பெண்கள் தலைமையில் முதன்முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி கழகத் தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்.

“தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை அணிக்கு தற்போது நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய அணி கழக கட்டமைப்பை சார்ந்து விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். இந்த புதிய அணிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என விஜய் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் கட்சியின் முதல் உறுப்பினராக தன் பெயரைப் பதிவு செய்துள்ளார் விஜய். இனி உறுப்பினர் சேர்க்கை பணி வேகம் பெறும் எனத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!