தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் சோதனை

1 mins read
e1f9618e-158b-4196-9322-eca219c4f377
தமிழகத்தில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது வருமானவரித்துறை. - படம்: ஊடகம்

நெல்லை: தமிழக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

திமுகவின் தேர்தல் பரப்புரையை தடுக்கவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக ஆவுடையப்பபன் குற்றம்சாட்டி உள்ளார்.

தற்போது நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார் ஆவுடையப்பன். அவருடைய அலுவலகம் மகாராஜா நகரில் உள்ளது. வியாழக்கிழமை மாலை காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் ஆவுடையப்பன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது, அவரது அலுவலகத்தில் வருமானவரித் துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து திமுகவினர் அங்கு திரண்டனர். இரண்டு மணிநேர சோதனைக்குப் பின்னர் அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். அந்த அலுவலகத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றார் ஆவுடையப்பன்.

குறிப்புச் சொற்கள்