தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 அடி உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

1 mins read
f6d81279-9df5-4ed1-854d-a0f9abdecbbe
உள்வாங்கிய திருச்செந்தூர் கடல். - படம்: புதிய தலைமுறை

திருச்செந்தூர்: தமிழகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அருகே கடற்கரை அமைந்துள்ளது.

இந்தப் பகுதிக் கடல் அடிக்கடி உள்வாங்கி காணப்படுவதும் சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கோவில் கடல், வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த மூன்று நாள்களாக உள்வாங்குவதும் சில மணிநேரத்துக்குப் பின்னர் சீற்றத்துடனும் காணப்பட்டு வருவதாக தமிழக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் கடல் சுமார் 100 அடிகள் உள்வாங்கிக் காணப்பட்டது. இதனால் பச்சை நிறப் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறையின் மீது ஏறி நின்று செல்ஃபி படங்கள் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்