உடுமலை பஞ்சலிங்க அருவி மீண்டும் திறப்பு

1 mins read
c0c2a259-dcea-4ce4-9e36-cf123aae9115
உடுமலை பஞ்சலிங்க அருவி. - கோப்புப் படம்: மாலை மலர்

திருப்பூர்: தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவை முக்கிய சுற்றுலாத்தலங்களாக உள்ளன.

தற்போது சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் அருவியில் குளிக்க வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அருவிக்குச் சென்று குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுப்பயணிகள், ஐயப்ப பக்தர்கள் ஆகியோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை (டிசம்பர் 1) மழைப்பொழிவு குறைந்து பஞ்சலிங்க அருவியின் நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளதால் இரண்டு நாள்களுக்கு பிறகு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்