சென்னை: இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வோங், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவருமான விஜய்யை அண்மையில் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
தவெகவை நிறுவிய விஜய், சைமன் வோங்கை சந்தித்துள்ளதன் மூலம் அனைத்துலகப் பார்வையில் தமது அரசியல் பயணத்தை விரிவுபடுத்துகிறார் எனப் பலரும் கருதுகின்றனர்.
இருவரும் அன்போடு கைகுலுக்கி பேசுவதைக் காட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்தச் சந்திப்பு, விஜய்யின் அரசியல் களத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது, வெளிநாட்டு உறவுகளுக்கான தொடக்கமாகவும் கருதப்படுகிறது.
இருவரும் எப்போது, எங்கு சந்தித்தனர் என்பது குறித்து தெரியவில்லை.

