மணப்பெண் கிடைக்காததால் இயந்திரப் பெண்மணியை மணந்தார் மாப்பிள்ளை

மணப்பெண் கிடைக்காததால் இயந்திரப் பெண்மணியை மணந்தார் மாப்பிள்ளை

fallback-0

05 Apr 2017 - 8:14 am

1 mins read

சீனாவில் ஹாங்சூ நகரில் பிரபலமான ஹுவாவெய் தொலைத்தொடர்பு நிறுவனத் தில் முன்பு பணியாற்றி வந்த செங் ஜியாஜா என்பவர் மனித இயந்திரச் சாதனங்களை உருவாக்குவதில் நிபுணராக இருக்கிறார். இப்போது ஹாங்சூ டிரிம் டைம் என்ற இணையக் கூட்டுத்தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜியாஜா எப்பொழுதுமே வேலையே கதி என்று இருப்பவர். இவருக்கு இப்போது 31 வயதாகிவிட்டது. பல ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று இவர் படாதபாடுபட்டு வந்தார்.

ஆனால் பலன் இல்லை. இவருடைய தாயார் தன் மகனுக்கு ஒரு பெண்ணைப் பார்க்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டன. தன்னை மணந்துகொள்ள ஒரு பெண் கூட முன்வராததைக் கண்டு ஜியாஜா மிகவும் மனம் உடைந்துபோய்விட்டதாக அவருடைய நண்பர் ஒருவர், 'சியாங் ஜியாங் ஈவ்னிங் நியூஸ்' என்ற செய்தித் தாளிடம் தெரிவித்தார். மிகவும் மனம் உடைந்துபோன ஜியாஜா, தானே ஒரு மனித இயந்திரப் பெண்ணை உருவாக்கி அதை திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். இரவும் பகலும் அரும்பாடுபட்டு அப்படி ஒரு பெண்ணை சென்ற ஆண்டு முடிவில் அவர் உருவாக்கினார். அந்தப் பெண்ணுக்கு 'யிங்யிங்' என்று பெயர் சூட்டினார்.

மணமகனான சீனப் பொறியாளர் செங் ஜியாஜா, தான் மணந்து கொண்ட இயந்திரப் பெண் யிங்யிங்குடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். படம்: சியாங் ஜியாங் ஈவ்னிங் நியூஸ்