சிங்கப்பூர்வாசிகளின் உண்மையான இடைநிலை வருமானம் 2.1% அதிகரிப்பு

பணவீக்கத்தின் தாக்கத்தால் வருவாய் பாதிப்படைந்தபோதும் சிங்கப்பூர்வாசிகளின் உண்மையான இடைநிலை வருமானம் இந்த ஆண்டு 2.1 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஒப்புநோக்க சென்ற ஆண்டு அது 0.9 விழுக்காடாக இருந்தது.

மனிதவள அமைச்சு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட முன்னோடி ஊழியரணி அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

பணவீக்கம் குறைவாக இருந்த 2014ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் உண்மையான வருமானம் குறைவு என்பதையும் அமைச்சு சுட்டியது.

கடந்த ஏப்ரல் மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆண்டிடை விரிவான ஊழியரணிக் கருத்தாய்வில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைச்சின் அறிக்கை அமைந்துள்ளது.

குறைவான வருவாய் ஈட்டும் ஊழியர்களிடையே வருமான வளர்ச்சி வலுவாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வேளையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்குமான வேலைவாய்ப்பு விகிதம் உயர்ந்துள்ளது. இவ்வாண்டு அது 67.5 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. ஒப்புநோக்க கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்த நிலையைக் காட்டிலும் இது அதிகம்.

பொருளியல் ஒத்துழைப்பு, மேம்பாட்டு அமைப்பில் உள்ள நாடுகளின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதத்துடன் ஒப்பிட்டால் சிங்கப்பூர் மூன்றாவது நிலையில் உள்ளது என்று மனிதவள அமைச்சு கூறியது.

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது. நீண்டகால அடிப்படையிலான வேலையின்மை விகிதமும் கிட்டத்தட்ட கிருமிப் பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குக் குறைந்துள்ளதாக அமைச்சு கூறியது.

இருப்பினும் இவ்வாண்டு ஊழியரணிப் பங்களிப்பு 0.5 விழுக்காடு குறைந்து 70 விழுக்காடு ஆனது. மூப்படையும் மக்கள்தொகையால் வருங்காலத்தில் அது மேலும் குறையக்கூடும். 

அமைச்சின் அறிக்கை தொடர்பான செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், ஊழியரணியில் இல்லாதவர்கள் மீண்டும் முழுநேர வேலைகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டினார். வேலை மாற்றத் திட்டம், திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சி உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதை அமைச்சர் எடுத்துரைத்தார்.

இவ்வேளையில் தொழில்நுட்பத் துறையில் மூன்றாம் காலாண்டில் இடம்பெற்ற ஆள்குறைப்பு நடவடிக்கைகள் சம்பள உயர்வைப் பாதிக்கக்கூடும் என்று டாக்டர் டான் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!