ரகசிய ஆவணங்கள் கசிவு: அமெரிக்கர்மீது சந்தேகம்

ரகசிய ஆவணங்கள் கசிவு: அமெரிக்கர்மீது சந்தேகம்

fallback

11 Apr 2023 - 5:30 am

2 mins read

ரக­சிய ராணுவ, உளவு ஆவ­ணங்­கள் இணை­யத்­தில் கசிந்­த­தைத் தொடர்ந்து, அது எப்­படிக் கசிந்­தது என்­ப­தைக் கண்­ட­றிய அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் தடு­மாறி வரு­கின்­ற­னர்.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஒரு­வ­ரால்­தான் அந்த ஆவ­ணங்­கள் கசிந்­தி­ருக்­கக்­கூ­டும் என சில பாது­காப்பு நிபு­ணர்­களும் அமெ­ரிக்க அதி­கா­ரி­களும் சந்­தே­கிக்­கின்­ற­னர்.

உக்­ரே­னில் நில­வி­வ­ரும் போர், சீனா, மத்­திய கிழக்கு, ஆப்­பி­ரிக்கா போன்று ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்ட தலைப்­பு­க­ளைப் பார்க்­கும்­போது, அமெ­ரிக்­கர் ஒரு­வரே அவற்றை இணை­யத்­தில் வெளி­யிட்­டி­ருக்­கக்­கூ­டும் என்று தெரி­வதாக அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

இணை­யத்­தில் கசிந்த உளவு ஆவ­ணங்­கள், அமெ­ரிக்க தேசி­யப் பாது­காப்­பி­லும் அதன் நட்பு நாடு­கள் மீதும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தாக்­கத்தை அமைப்­பு­கள்­நி­லைப் பணிக்­குழு மதிப்­பிட்டு வரு­வ­தாக அமெ­ரிக்­கத் தற்­காப்பு அமைச்சு நேற்று முன்­தி­னம் கூறி­யது.

விசா­ரணை தொடக்­க­நி­லை­யில் இருப்­ப­தா­க­வும் தக­வல் கசி­வுக்­குப் பின்­னால் ரஷ்­யா­வுக்கு ஆத­ர­வான அம்­சங்­கள் இருப்­பதை விசா­ர­ணைக்­குழு மறுக்­க­வில்லை என்­றும் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் கூறி­னர்.

2013ல் 'விக்­கி­லீக்ஸ்' இணை­யப் பக்­கத்­தில் 700,000க்கும் அதி­க­மான ஆவ­ணங்­கள், காணொ­ளி­கள் கசிந்­த­தைத் தொடர்ந்து, ஆகக் கடு­மை­யான பாது­காப்பு அத்­து­மீ­றல்­களில் ஒன்­றாக இது கரு­தப்­ப­டு­கிறது.

அந்த ஆவ­ணங்­கள் திரித்து வெளி­யி­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்­ப­தற்கான சாத்தியத்தையும் அமெ­ரிக்க அதி­கா­ரி­கள் மறுக்­க­வில்லை.

'பிப்­ர­வரி 23' என தேதி­யி­டப்­பட்டு, 'ரக­சி­யம்' எனக் குறிக்­கப்­பட்ட ஓர் ஆவ­ணம், தற்­போது பயன்­பாட்டு விகி­தத்­தில் உக்­ரே­னின் எஸ்-300 ரக ஆகா­யத் தற்­காப்பு முறை மே 2ஆம் தேதிக்­குள் எப்­படி தீர்ந்­து­வி­டும் என்­பதை விவ­ர­மாகப் பட்­டி­ய­லிட்­டது.

ரக­சி­ய­மாக காக்­கப்­பட வேண்­டிய இத்­த­கைய தக­வல், ரஷ்­யப் படைக்­குப் பயன்­த­ரும் வகை­யில் இருக்­கக்­கூ­டும். கசி­வு­க­ளைத் தவிர்ப்­ப­தற்­கான வழி­களை ஆராய்­வ­தன் பொருட்டு, உக்­ரே­னிய அதி­ப­ரும் உயர் பாது­காப்பு அதி­கா­ரி­களும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை சந்­திப்பு நடத்­தி­ய­தாக உக்­ரேன் தெரி­வித்­தது.

இணை­யத்­தில் கசிந்த மற்­றோர் ஆவ­ணம், உக்­ரே­னுக்கு ஆயு­தங்­கள் வழங்க உதவியதாக தென்­கொ­ரி­யா­வுக்கு அமெ­ரிக்கா கொடுத்து வந்த அழுத்­தம் பற்றி மூத்த தென்­கொ­ரிய அதி­கா­ரி­களுக்கு இடையே நடந்த உரை­யாடல்­கள் குறித்த விவ­ரங்­களை வெளி­யிட்­டது.

இணை­யத்­தில் கசிந்த ஆவ­ணங்­கள் குறித்த செய்­தி­க­ளைப் பற்றி தென்­கொ­ரியா அறிந்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அதி­பர் மாளிகைப் பேச்­சா­ளர், இந்த விவ­கா­ரம் குறித்து அமெ­ரிக்­கா­வு­டன் தென்­கொ­ரியா கலந்­தா­லோ­சிக்க இருப்­ப­தா­கச் சொன்­னார்.

இந்­நி­லை­யில், உளவு ஆவ­ணங்­கள் எவ்­வாறு பர­வ­லாக பகி­ரப்­ப­டு­கின்­றன என்­ப­தன் தொடர்­பில் ராணுவ, உளவு அமைப்­பு­கள் ஆராய்ந்து வரு­வ­தாக இரு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ரக­சி­யத் தக­வல்­களை வெளி­யி­டு­வ­தில் அமெ­ரிக்க அதி­காரி அல்­லது அதி­கா­ரி­க­ளுக்கு என்ன உள்­நோக்­கம் இருந்­தி­ருக்­கக்­கூடும் என்­பது பற்­றி­யும் அதி­காரி­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.