வரலாற்றிலேயே 2023 ஆக வெப்பமான ஆண்டு

பாரிஸ்: வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து வரலாற்றிலேயே ஆக வெப்பமான ஆண்டாக இவ்வாண்டு இருக்கும் என ஐரோப்பாவின் பருவநிலைக் கண்காணிப்பாளர் புதன்கிழமை கூறினார்.

பருவநிலை சாதனைகளை முறியடித்த ஆறாவது மாதமான நவம்பர் ஒரு தனிச்சிறப்புடைய மாதமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவலைத் தெரிவிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

துபாயில் நடைபெறும் ‘காப் 28’ உச்சநிலை மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்துப் பேச்சுவார்த்தை நடக்கும் வேளையில் இந்தத் தகவல் அழுத்தம் தருவதாக உள்ளது.

இவ்வாண்டு நவம்பர் மாதம், இதற்கு முந்தைய நவம்பர் மாதங்களோடு ஒப்பிடும்போது ஆக வெப்பமான மாதமாக இருந்தது.

இவ்வாண்டு உலகளாவிய சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவை விட 1.46 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் பருவநிலை மாற்றத்திற்கான சேவை நிலையம் கூறியது.

2023ஆம் ஆண்டு ஆக வெப்பமான ஆண்டாக இருக்கும் என 2016லிருந்து எச்சரிக்கப்பட்டு வந்தது. குறிப்பாகச் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆக வெப்பமான மாதங்களாக இருக்கும் எனவும் இதற்கு முன்னர் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், இந்த எச்சரிக்கை முதல்முறையாக உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!