இந்தோனீசியத் தீவருகே 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; மலேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

இந்தோனீசியத் தீவருகே 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; மலேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

1 mins read
487b1390-0c4a-45ce-ac05-a38538940eca
மொலுக்கா கடலில் 35 கிமீ ஆழத்தில் காலை 6.48 மணிக்கு பெரும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் கூறியது. - படம்: அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் டெர்னேட் தீவருகே வியாழக்கிழமை (ஏப்ரல் 2) காலை 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீவுக்கு அப்பாலுள்ள வடக்கு மொலுக்கா கடலில் 35 கிமீ ஆழத்தில் காலை 6.48 மணிக்கு பெரும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில் ஐந்து ரிக்டர் அளவுக்கு மேல் நில அதிர்வுகள் உணரப்பட்டபோதிலும் காயமடைந்தோர் பற்றி உடனடித் தகவல் இல்லை என்று அந்நிலையம் கூறியது.

அதனைத் தொடர்ந்து, வடமலூக்கு மற்றும் வடசுலாவேசி மாகாணங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இந்தோனீசிய அரசாங்கம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. வடமலூக்கு மாகாணத்தில் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக மலேசியா, பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தோனீசியக் கடலோர வட்டாரத்தில் 1,000 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிகளில் கடுமையான சுனாமி அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக ஹவாயியைத் தளமாகக் கொண்ட பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்