காஸா சிட்டி: ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிடுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அறிவித்துள்ளார்.
அது, காஸாவில் புதிய பாலஸ்தீன அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கிய நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். தங்களின் ஆயுதங்கள் தொடர்பான அம்சங்கள், காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் கட்டங்கட்டமாக வெளியேறுவது உள்ளிட்டவற்றின் தொடர்பிலான அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக மூத்த ஹமாஸ் அதிகாரிகள், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

