ஜப்பானில் கைவிடப்பட்ட வீடுகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு

1 mins read
9bf66fda-e368-4895-b19b-4faa2f83f93d
ஜப்பானில் கைவிடப்பட்ட வீடுகளில் சில. - படம்: oldhousesjapan.com / இணையம்

தோக்கியோ: செயற்கைக்கோள் பதிவுகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியோடு காலியான, கைவிடப்பட்ட வீடுகளை அடையாளம் காணும் முயற்சியில் பல ஜப்பானிய நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

மூப்படையும் சமூகத்தைக் கொண்டுள்ள ஜப்பானில் அதிகமான கைவிடப்பட்ட வீடுகள் இருந்து வருகின்றன.

புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனமான வேர் இன்க் (Where Inc), செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பழைமைவாய்ந்த கூரைகள் போன்ற அம்சங்களை அடையாளம் காணும் சேவையை வழங்குகிறது. நிறம், எவ்வளவு பாழடைந்து இருக்கிறது போன்றவற்றைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு அடையாளம் காண்கிறது.

கைவிடப்பட்டதாக நம்பப்படும் வீடுகள் செயற்கைக்கோள் படங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இவ்வாறு, அத்தகைய கைவிடப்பட்ட வீடுகளின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்புகொள்ளப்பட்டிருக்கின்றனர். இதனையடுத்து அத்தகைய வீடுகளை விற்பதற்கான நடைமுறைகள் தொடர்கின்றன.

கைவிடப்பட்ட வீடுகளை அடையாளம் காணும் சேவையை வேர் இன்க் 2024ஆம் ஆண்டு முழுமையாகத் தொடங்கியது. அதிலிருந்து சுமார் 50 நிறுவனங்கள் இச்சேவைக்காக வேர் இங்க்கை நாடியிருக்கின்றன.

ஜப்பானில் காலிசெய்யப்பட்டு கைவிடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் கைவிடப்பட்ட வீடுகள் அந்நாட்டில் இருந்ததாக அரசாங்கப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

குறிப்புச் சொற்கள்