தோக்கியோ: இவ்வாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை ஜப்பானில் 230 பேர் கரடிகளால் தாக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட முதற்கட்டத் தரவுகள் தெரிவிக்கின்றன.
2025 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களுக்கான எண்ணிக்கை, ஏற்கெனவே ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை தாக்கப்பட்ட 219 பேரைவிட அதிகமாக உள்ளது என்று சுற்றுப்புற அமைச்சு தெரிவித்தது.
அதிகமாக, அகிட்டா மாநிலத்தில் 66 பேர் கரடித் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர்; இவாட், புகுஷிமா மாநிலங்களில் முறையே 37 மற்றும் 24 பேர் பாதிக்கப்பட்டனர்.
நவம்பரில் மட்டும் 33 பேர் கரடித் தாக்குதலுக்கு ஆளாகினர். அவர்களில் ஒருவர் மாண்டுபோனார்.
நவம்பர் 20ஆம் தேதிவரை நாடு முழுவதும் சாதனை அளவாக 13 பேர் கரடி தாக்கி இறந்துவிட்டனர் என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்தது.

