டுரியான் துறையில் செயற்கை நுண்ணறிவு: தாய்லாந்து முயற்சி

டுரியான் துறையில் செயற்கை நுண்ணறிவு: தாய்லாந்து முயற்சி

2 mins read
f36c5229-86ad-4148-8445-83d81f604f3a
தாய்லாந்தின் தனியார் துறை நிறுவனங்கள் டுரியான் பழங்கள் எந்தளவு பழுத்துள்ளன என்பதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் உயர்கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, புத்தாக்க அமைச்சு, நாட்டின் டுரியான் துறையை உருமாற்ற செயற்கை நுண்ணறிவையும் அதிநவீனத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி டுரியான் பழங்களின் ஏற்றுமதியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்ள தாய்லாந்துத் துணைப் பிரதமரும் உயர்கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, புத்தாக்கத் துறை அமைச்சருமான யோட்‌‌சனான் வோங்சவாட், சந்தாபுரி மாநிலத்திற்குச் சென்றார்.

டுரியானை ஒரு சாதாரண பழமாகப் பார்க்கக்கூடாது என்ற யோட்சனான், மதிப்பு கூட்டப்படும் வேளாண் பொருளாக அதைக் கருதவேண்டும் என்றார்.

டுரியான் பழங்களை ரகம் பிரிப்பது முதல் அவற்றை ஏற்றுமதி செய்வது வரை அனைத்தையும் பார்வையிட்டதாகக் கூறிய திரு யோட்சனான், அறிவியலும் புத்தாக்கமும் ஆய்வுக்கூடங்களுக்கு மட்டும் உட்பட்டவையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டதாகக் கூறினார்.

தாய்லாந்தில் உள்ள பலவகை டுரியான் பழங்களையும் அவற்றின் தனித்துவமான தரங்களையும் அடிப்படையாகக் கொண்டு சொந்தத் தொழில்நுட்பத்தைத் தாய்லாந்து உருவாக்கவேண்டும். அதுதான் தமது அமைச்சின் குறிக்கோள் என்றார் திரு யோட்சனான்.

டுரியான் துறையில் அமைச்சு மேற்கொள்ள விரும்பும் முக்கிய அம்சங்கள் சிலவற்றைத் திரு யோட்சனான் குறிப்பிட்டார்.

முதலாவதாக, பழங்களைப் பொட்டலமிடும் நவீன இடங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். டுரியான் பழுத்துள்ளதைச் சரிபார்க்கவும் செயற்கை நுண்ணறிவை தனியார் துறை நிறுவனங்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

இரண்டாவது ஏற்றுமதிகளில் உதவ அணுசக்தித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

டுரியானின் ஓடுகளிலிருந்து உயர் ரக செல்லுலோஸ் அணுவையும் நார்ச்சத்தையும் பிரித்தெடுக்கும் முயற்சியில் தாய்லாந்தின் அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகமும் பல்கலைக்கழகக் கட்டமைப்புகளும் வெற்றி கண்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
டுரியான்பழம்செயற்கை நுண்ணறிவு