ஹாங்காங்: பைடு நிறுவனம், தனது அப்போலோ கோ ரோபோடாக்சி சேவையைச் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் 2025ல் தொடங்கக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
பங்காளியாக இருக்கக்கூடிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் அப்போலோ கோ, சிங்கப்பூர் மற்றும் மலேசிய சந்தைகளுக்குப் பொருந்தக்கூடிய வர்த்தகத் திட்டங்களை ஆராய்ந்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறியுள்ளார்.
நடமாட்டச் சேவை வழங்குநர்கள், உள்ளூர் டாக்சி நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு வாகன நடத்துநர்கள் ஆகியோரை பைடு நிறுவனம் நாடுவதால் அதன் தலைமை நிர்வாகி ராபின் லீ தெரிவித்தார்.
அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம், தனது சைபர்கேப் ரோபோடாக்சி கட்டமைப்பை இன்னும் சில நாள்களில் தொடங்கவிருக்கும் நேரத்தில் பைடு பற்றிய இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
தானியக்க வாகனத் தொழில்நுட்பத்தில் டெஸ்லா மேலும் முதலீடு செய்யவுள்ளது.
அப்போலோ கோ விரைவாக வளர்ந்து வருகிறது.. இதுவரையில் அந்நிறுவனம், 1,000க்கும் மேற்பட்ட தானியக்க வாகனங்களைப் பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. அந்த வாகனங்கள் பெரும்பாலானவை, சீனாவில் இயங்குகின்றன.
2025ன் முதல் காலாண்டில் அப்போலோ கோ சேவையின்வழி 11 மில்லியன் பயணங்கள் நிறைவுபெற்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

