டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகே வெள்ளிக்கிழமை (நவம்பர் 21) 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் மாண்டோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் சனிக்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.30 மணிவாக்கில் அது ஏற்பட்டது. ஆசுலி பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இருப்பினும், அது சக்தி குறைவான 3.3 ரிக்டர் நிலநடுக்கம் என்று அதிகாரிகள் கூறினர்.
வெள்ளிக்கிழமை பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் டாக்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாவது வழக்கமான ஒன்று என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவானதால் பங்ளாதேஷ் மக்கள் செய்வதறியாது அச்சத்தில் உள்ளனர்.

