டாக்கா: பங்ளாதேஷில் அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (டிசம்பர் 11) இரவு அந்தத் தகவலை வெளியிட்டது.
சென்ற ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் ஷேக் ஹசினா இந்தியாவுக்குத் தப்பியோட நேரிட்டது.
பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தை நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான பேராசிரியர் முகம்மது யூனுஸ் வழிநடத்தி வருகிறார்.
173 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட பங்ளாதேஷில், சீர்திருத்தம் குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்களிடையே அதிருப்தி நிலவுகிறது.
முன்னாள் பிரதமர் கலீடா ஸியாவின் பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகப் பரவலான கருத்துகள் நிலவுகின்றன.
தேர்தலில் அதற்கு ஜமாட்-இ-இஸ்லாமியக் கட்சி போட்டிகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற ஆண்டு மாணவத் தலைவர்கள் நிறுவிய தேசியக் குடிமக்கள் கட்சி, கருத்துக் கணிப்புகளில் மூன்றாம் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திருவாட்டி ஹசினாவின் அவாமி லீக், தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை அகற்றப்படவில்லை என்றால் கலவரம் வெடிக்கும் என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.

