சீரழிக்கப்பட்ட விமானச் சிப்பந்திகள்; ஃபிஜி அதிகாரிகள் விசாரணை

சீரழிக்கப்பட்ட விமானச் சிப்பந்திகள்; ஃபிஜி அதிகாரிகள் விசாரணை

1 mins read
79b0a595-59a1-4bdb-bf31-b8806f2fc543
பாதிக்கப்பட்ட விமானச் சிப்பந்திகளுக்கு ஆதரவு வழங்க ஃபிஜிக்கு ஆட்களை அனுப்பியுள்ளதாக வெர்ஜின் விமானச் சேவை நிறுவனம் கூறியது. - படம்: ஃபிஜி
Google News Preferred Icon

சுவா: வெர்ஜின் ஆஸ்திரேலியா விமானச் சேவையின் சிப்பந்திகள் இருவர் ஃபிஜியில் புத்தாண்டு நாள் அதிகாலை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகக் கூறப்படுகிறது.

அவர்களது உடைமைகளும் திருடப்பட்டதாக அறியப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதாக ஃபிஜி காவல்துறை ஜனவரி 2ஆம் தேதியன்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட விமானச் சிப்பந்திகளுக்கு ஆதரவு வழங்க ஃபிஜிக்கு ஆட்களை அனுப்பியுள்ளதாக வெர்ஜின் விமானச் சேவை நிறுவனம் கூறியது.

சம்பவம் குறித்து கூடுதல் விவரங்களை அது வெளியிடவில்லை.

ஃபிஜியில் உள்ள இரவு விடுதிக்கு வெர்ஜின் ஆஸ்திரேலியாவின் விமானச் சிப்பந்திகள் சிலர் சென்றிருந்ததாக ஃபிஜி காவல்துறை கூறியது.

அவர்களில் இருவர் இரவு விடுதியிலிருந்து வெளியேறி தங்கள் ஹோட்டலுக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்