தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவின் தானியக்க பறக்கும் டாக்ஸி; ஆஃப்ரிக்காவில் இயக்கம்

1 mins read
72e2abb1-292c-49bb-9647-d79d5e8057fc
சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனமான ஈஹங் ஹோல்டிங்ஸ் (EHang Holdings) தயாரித்த, மின்சார ஊர்தி இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. - படம்: செயற்கை நுண்ணறிவு

சீனாவில் தயாரிக்கப்பட்ட தானியக்க பறக்கும் டாக்ஸியின் முதல் சோதனை ஆஃபிரிக்காவில் இந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது. 

புதிய தலைமுறை சீன லோ-ஆல்டிட்யூட் விமானங்களுக்கு உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் ஆர்வத்தை இந்நிகழ்வு காட்டுகிறது.

சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனமான ஈஹங் ஹோல்டிங்ஸ் (EHang Holdings) தயாரித்த, மின்சார ஊர்தி இந்தச் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

34 நாடுகள் கலந்துகொண்ட ஆஃபிரிக்கா விமானத்துறை உச்சநிலை மாநாடு மற்றும் கண்காட்சி (Aviation Africa Summit and Exhibition), ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் கடந்த வியாழன் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது வாகனம்  சோதனையை செய்யப்பட்டது.

சீன அரசுக்குச் சொந்தமான ‘சைனா ரோடு அன்ட் பிரிட்ஜ் கார்ப்பரேஷன்’கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனத்துடன் ருவாண்டா இந்தச் சோதனை விமானத்திற்கு ஏற்பாடு செய்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது.

14.2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மற்றும் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையைக் கொண்ட ருவாண்டா, நகர்ப்புற நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஒரு வழியாக சிறந்த விமானப் போக்குவரத்து இணைப்புகளை உருவாக்க முயற்சிப்பதாக ஆஃபிரிக்கா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்