செந்தோசா சூதாட்டக்கூடத்தில் $10,000 கள்ள நோட்டுகள்: இந்தோனீசியா விசாரணை

செந்தோசா சூதாட்டக்கூடத்தில் $10,000 கள்ள நோட்டுகள்: இந்தோனீசியா விசாரணை

படம்: எஸ்பிஎச்

29 Sep 2026 - 11:28 am

2 mins read

ஜகார்த்தா: சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில் இயங்கும் சூதாட்டக்கூடத்தில், $10,000 கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திய சந்தேகத்தில் மூவரை இந்தோனீசியக் காவல்துறை விசாரித்து வருகிறது.

ஜூன் மாதத்தில் அந்த சூதாட்டக்கூடத்தில் மூன்று முறை நடந்த சம்பவங்கள் குறித்து அந்த விசாரணை தொடர்கிறது.

அந்த மூன்று நபர்களில் பான்டென் பகுதியில் செயல்படும் பாரம்பரிய சிலாட் தற்காப்புக் கலை மையத்தின் உறுப்பினரான ஹெச்டி என்ற 62 வயது ஆடவர் ஒருவர். மற்ற இருவரில் ஏஎன் என்ற 56 வயது வர்த்தகரும் ஈஏகே என்ற 43 வயது ஆடவரும் அடங்குவர். அப்பெயர்கள் குறியீடுகள் மட்டுமே என்று காவல்துறை ஆவணங்களைப் பார்வையிட்ட ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

தெற்கு தெங்காராங் காவல்துறைத் தலைவர் பாய் ஜுமலொலொ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) முன்வைத்த கேள்விகளுக்கான முழு விவரங்களை வழங்கவில்லை.

ஸ்டீவன் என்ற பெயருடன் மட்டும் அடையாளம் காணப்பட்ட வர்த்தகர் $10,000 மதிப்புள்ள 34 போலி சிங்கப்பூர் நோட்டுகளை செந்தோசாவில் உள்ள ஆர்டபிள்யூஎஸ் (RWS) சூதாட்டக்கூடத்தில் மூன்று முறை பயன்படுத்தியுள்ளார். அதைக்கொண்டு அங்கு சேவையில் இருந்த ஊழியர்களிடம் சூதாட்டத்துக்குத் தேவைப்படும் சிப்பு நாணயங்களை அவர் மாற்றியுள்ளார். மாற்றப்பட்ட நோட்டுகள் கள்ளப்பணம் என்பது பிறகு கண்டறியப்பட்டது.

சம்பவம் நடந்தபிறகு, சிங்கப்பூர் காவல்துறை இந்தோனீசியக் காவல்துறையைத் தொடர்புகொண்டது.

இந்தோனீசியக் காவல்துறைத் தலைவர் பாய், அவரது அதிகாரிகள் சிங்கப்பூர் காவல்துறையினரை சந்தித்ததாகக் கூறினார். ஜகார்த்தாவில் உள்ள சிங்கப்பூர் காவல்துறைத் துணை அலுவலகத்துடனும் இணைந்து ஓர் இணையச் சந்திப்பு செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது என்று அவர் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 34 நோட்டுகளும் கள்ளப்பணம் என்பதை உறுதி செய்யும் கடிதத்தை சிங்கப்பூர் காவல்துறையிடம் இந்தோனீசிய அதிகாரிகள் கேட்டுள்ளனர். அந்தக் கள்ள நோட்டுகள் அனைத்தும் 1973ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டதாக அவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்