கட்சித் தலைவர்களுடன் பேசி புதிய அமைச்சர்கள் குறித்து முடிவு: அன்வார்

1 mins read
8a49b340-04d7-43a4-bd4a-2be842144576
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சைபர்ஜெயா: கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமது அரசாங்கத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்பவிருப்போர் குறித்து விரைவில் அறிவிக்கப்போவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மலேசிய நிதி அமைச்சருமான திரு அன்வார், என்னதான் அமைச்சரவை நியமனங்களைத் தெரிவுசெய்ய தமக்கு உரிமை இருக்கிறது என்றாலும் அரசாங்கத்தில் எல்லாக் கட்சித் தலைவர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டு கருத்தில்கொள்ளப்படும் என்றார். எப்போதும்போல் ஜனநாயக முறைப்படி ஒன்றாகப் பணியாற்றுவோரின் கருத்துகளுக்கு மதிப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கட்சித் தலைவர்களின் பல்வேறு கருத்துகளை நிச்சயமாகக் கேட்பேன். ஆனால், விரைவில் நான்தான் இறுதி முடிவெடுப்பேன்,” என்று திரு அன்வார் செய்தியாளர்களிடம் சொன்னார். மஸ்ஜித் சைபர்ஜெயா 10ல் சுமார் 1,500 பேருடன் ஒன்றுசேர்ந்து வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) பிரார்த்தனையில் ஈடுபட்ட பிறகு அவர் பேசினார்.

மக்களின் விருப்பங்களையும் தேசத்தின் சீர்திருத்த இலக்குகளையும் மையமாகக் கொண்டு வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு சரியான முறையில் புதிய நியமனங்கள் குறித்து முடிவெடுக்கப்போவதாக பிரதமர் அன்வார் முன்னதாகக் கூறியிருந்தார். பெரிய அளவில் அமைச்சரவை மாற்றங்கள் இருக்காது என்றும் கூறிய அவர், காலியாக இருக்கும் பல அமைச்சர் பொறுப்புகள் மட்டும் நிரப்பப்படும் என்று தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்