பிரசிலியா: பிரேசிலின் பல உயர்மட்ட சமூகத்தினர், அரசியல் தலைவர்கள் அதிகமானோர் சம்பந்தப்பட்டுள்ள மோசடி விசாரணையில் முக்கியத் தரப்பாக அந்நாட்டின் பாங்கோ மாஸ்டர்ஸ் வங்கி இருக்கிறது.
அவ்வங்கியின் செயல்பாடுகளை பிரேசிலின் மத்திய வங்கி சென்ற ஆண்டு நிறுத்தியது. பாங்கோ மாஸ்டர்ஸ் கடன் வழங்கியதில் ஏமாற்று வேலை இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அகஸ்டோ லிமாவை பிரேலிசியக் காவல்துறை சனிக்கிழமை (நவம்பர் 28) கைது செய்தது. கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட வங்கியின் தலைவரான டேனியல் வோர்க்காரோ தொடர்ந்து காவல்துறை தடுப்புக் காவலில் இருந்துவருகிறார்.
பாஹியா மாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகரான லிமா, முதற்கட்ட விசாரணையின்போது வோர்க்காரோவுடன் கைது செய்யப்பட்டோரில் ஒருவராவார். எனினும், கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து லிமா விடுவிக்கப்பட்டார்.
பாங்கோ மாஸ்டர்ஸ்மீதும் அது ஈடுபட்டதாகக் கூறப்படும் ஊழல் விவகாரங்கள் தொடர்பிலும் மேற்கொளள்ப்பட்டுவரும் விசாரணைக்கு ‘ஆப்பரேஷன் ஸீரோ கம்பிலையன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மத்திய வங்கி அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு ஆகிய இரண்டையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் சிக்கியுள்ளனர்.
